இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்ஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை போன்ற 12 இடங்களைப் பட்டியலிட்டு இருக்கிறது என்றும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 46 நாள்களில் 48 போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. அடுத்து ஐபிஎல் போட்டிகளும் சென்னையில் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து உலகக்கோப்பை போட்டிகளுக்கான மைதானங்களில் சென்னையின் பெயரும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் குறைந்தது 4, 5 லீக் போட்டிகளாவது நடக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.