`இரண்டு நிமிட நிஜ வாழ்க்கை திகில் கதை’ என்ற தலைப்பில் அமித் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில், ஒருவர் மிகவும் வதங்கிய நிலையில் இருக்கும் கீரைக்கட்டு ஒன்றை வாளியில் இருக்கும் ரசாயனத் தண்ணீரில் முக்கி எடுக்கிறார்.
அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்தக் கீரை புதிதாகப் பறித்ததை போல ஃபிரெஷ்ஷாக மாறிவிடுகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, யார் எடுத்தது, எப்போது எடுக்கப்பட்டது போன்ற எந்த உறுதியான தகவல்களும் தெரியவில்லை. ஆனால் இதை இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவுக்கு கீழே பலரும் உணவுக் கலப்படம் குறித்து கமெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். சிலர், இந்த ரசாயனம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைக்கும் எனவும், சிலர் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.