அதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, அவரது வீட்டில் கிடைத்த 2 பக்க தற்கொலைக் கடிதத்தில்,”நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள், எனவே எங்கள் புகார்களுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. உள்ளூர் போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள். என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் எனக்கு தொல்லைக்கொடுக்க தொடங்கிவிட்டார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு தண்டனை கிடைக்காது என்று எனக்கு தெரியும்.

என் மரணத்துக்கு பிறகாவது அவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். என் மரணத்துக்கு பிறகு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள், இதனால் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெருமையுடன், அவர்களின் கனவுகளை நனவாக்க வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.