தூத்துக்குடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.. கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு : வேளாண் பட்ஜெட்டின் A டூ Z அறிவிப்புகள்!!

Share

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று  தாக்கல் செய்யப்பட்டது .இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு..,.

*2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்.

*பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.

*தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

*ஆறுகள், கால்வாய்களில், தடுப்பணைகள், வயல் சாலைகள் அமைத்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

*சிறு தானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்கள் அடங்கிய இரு சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும்.

*நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

*கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்.

*2,504 கிராம பஞ்சாயத்துகளில் ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்

*கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

*நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* முதற்கட்டமாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க திட்டம்

*60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்

*பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்

*வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.இவ்விருது ₹5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

*நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கம் மூலம் 196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன.
.
*வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு

*விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு

*இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

*ஏரி, குள வண்டல் மண்ணில் ஊட்ட சத்து இருப்பதால் விவசாயிகள் இவற்றை இந்த ஆண்டும் வயல்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்

*நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்

*1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு

*6 லட்சம் ஏக்கரில் நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு

*வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிக்காக, 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்த திட்டம்

*மின்னணு வேளாண்மை திட்டத்தின் கீழ், 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்

*355 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் மின்னணு உதவி மையங்கள் அமைக்கப்படும்

*விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்ல வட்டார அளவில் WhatsApp குழுக்கள்

*இயற்கை இடர்பாடுககளால் பாதிக்கபட்ட 40.74 லட்சம் ஏக்கர் பதிவு செய்த 26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு

*வரும் ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு

*ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து உழவர்களுக்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கம்

*விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்ய திட்டம்

*உணவு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்ட, வட்டார அலுவலர்களை ஊக்கப்படுத்த விருதுகள்

*சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழா நடத்தப்படும்

*ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு

*வேளாண் காடு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 75 லட்சம் செம்மரம், தேக்கு,சந்தனம் முழு மானியத்தில் வழங்க 15 கோடி ஒதுக்கீடு

*ஆதி திராவிட, பழங்குடியின சிறு – குறு விவாசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம்
*ஆதி திராவிட சிறு – குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
*பழங்குடியின சிறு – குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

*பல்வேறு துறைகளின் திட்டப் பலனை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில், ஒரு தளம் ஒரு பயன் திட்டம் அமல். 13-க்கும் மேற்பட்ட துறைகளின் திட்டப் பலன் இந்த இணைய தளம் மூலம் கிடைக்கும்

*கறவை மாடு, ஆடுகள், கோழி, தீவனப் பயிர், பழ மரங்கள், மரக் கன்றுகள், தேனீக்கள், மண்புழு உரம், பண்ணைக் குட்டை நீர் வளர்ப்பு.

*இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ரூ.50,000 மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*உழவர் நலன்சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி Grains (One Stop Solution) இணையதளம் அறிமுகம்

*எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய காந்தி, நிலக்கடலை, எள், சோளப் பயிர் சாகுபடியை பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு

*எண்ணெய் வித்து விதைகள், மற்றும் உற்பத்தி கொள்முதலுக்காக, சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

*தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு, தேசிய அளவில்முதல் இடம் பெற ஏதுவாக நடவடிக்கை – ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

*குமரி புத்தளம், செங்கோட்டை, தேவதானம் தென்னை நாற்று பண்ணையில் கூடுதலாக தலா 10 ஆயிரம் குட்டை, நெட்டை தென்னங் கன்றுகள் உற்பத்தி

*வேளாண் பயிர்காப்பீட்டு மானியத்திற்காக, மாநில அரசின் பங்காக, ரூ.2337 கோடி நிதி ஒதுக்கீடு

*உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.O
3 அல்லது 4 கிராமங்களுக்கு தலா, ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்
4311 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் 4 கிராமங்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவர்

*விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், திட்ட பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச் செல்ல உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்

*கரும்பு டன்னுக்கு ரூ.2751 கொடுக்கப்பட்டது; சிறப்பு ஊக்கத்தொகை கூடுதலாக ரூ.195 சேர்க்கப்பட்டு வழங்கப்படும்; இதற்காக, ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு. கரும்பு கொள்முதலுக்கான சிறப்பு ஊக்கத் தொகை மூலம் 1.50 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெறுவர்

*கோவையில் 5 ஆண்டுகளில், 1500 ஹெக்டேரில் கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

*மதுரை மல்லிக்கு ஓர் இயக்கமாக, மதுரையில் மல்லிக்கு பிரத்யேக தொகுப்பு ஏற்படுத்தப்படும்
*பருவம் இல்லா காலங்களிலும் மதுரை மல்லி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*இராமநாதபுரத்தில் மதுரை மல்லிகைக்கு தேவையான செடிகள் உற்பத்தி செய்யப்படும்

*மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை விவசாயிகளுக்கு ரூ.7 கோடியில் பயிற்சி

*1000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்து, மிளகாய் மண்டலம் ஏற்படுத்தப்படும்

*பருவ காலம் அல்லாத காலங்களிலும், தக்காளி, வெங்காயம் சாகுபடியை ஊக்குவித்து, ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி; வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு

*பேரீட்சை, அத்தி உள்ளிட்ட சிறப்பு தோட்டக் கலை பயிர்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய பயிற்சி; ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*டிராகன் ஃபுரூட், அவகேடா, லிச்சி போன்ற பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 1,000 ஹெக்டேரில் சாகுபடிக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*ரூ. 15 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வேளாண் குடும்பங்களுக்கு பேரீட்சை, டிராகன் ஃபுரூட், அவகோடா, அத்தி பழ சாகுபடி பயிர்கள் வழங்கப்படும்.

*கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு. 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு நிர்ணயம். பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும். பலா தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்படும்

*உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்க ரூ.30 கோடி மதிப்பில் திட்டம்

*கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 இடங்களில், ரூ.18 கோடி நிதியில் துவரை மண்டலம் அமைக்கப்படும்

*நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதியில் பருத்தி இயக்கம்

*பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான, தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளுக்கு விளக்க வேளாண் விஞ்ஞானிகள் திட்டம்

*கடந்த நிதியாண்டில் கரும்பு சாகுபடி பரப்பு 55 ஆயிரம் ஹெக்டேர் அதிகரிப்பு

*7 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு தளங்கள் சிமெண்ட் தளங்களாக அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

*சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்க ரூ.3 கோடி நிதி

*குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க, கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

*முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைத்து 1,000 ஹெக்டரில் முருங்கை சாகுபடியை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு

*கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம்

*1,000 ஹெக்டேரில் செள செள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியமாக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

*தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் நுண்ணீர் பாசனம் நிறுவ மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு

*பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையை பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு

*வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் பின்பற்றும் வகையில், விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

*வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மா, கொய்யா, பலா, சீதாப்பழம் போன்ற பழச்செடி தொகுப்புகள் வழங்கத் திட்டம்

*ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச்செடி தொகுப்புகள் வழங்க, ரூ15 கோடி நிதி ஒதுக்கீடு

*ஏற்காடு தாவரவியல் பூங்கா, மாதவரம் தோட்டக்கலைப் பூங்காவில், தலா ரூ.5 கோடியில், அலங்காரங்கள் அமைக்கப்படும்.

*பள்ளி மாணவ, மாணவிகளிடம் வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பண்ணை சுற்றுலா அறிமுகம்; ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

*உலக சந்தையில் தேனி வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் தனித்தொகுப்பு

*வேளாண் பணிக்கான வேலை ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரிக்கப்படும்

*பல்வேறு வேளாண் பணிகளுக்கு பயன்படும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு

*வேளாண் இயந்திரங்களை கிராமங்களிலேயே பழுது பார்க்க 200 ஊரக இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் பயிற்சி

*தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உட்பட வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்

*மாவட்டங்கள் தோறும் விதை திருவிழா கருத்தரங்கு, மீட்டெடுத்த விவசாயிகளுக்கு பரிசு தொகை வழங்க திட்டம்… வரும் ஆண்டில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டம்

*முந்திரி சாகுபடி வரும் ஆண்டு கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்க திட்டம்
உயர் விளைச்சல் ரக முந்திரி செடிகளை 500 ஹெக்டரில் நடவு செய்ய நடவடிக்கை

*பனை சாகுபடியை அதிகரிக்க 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என அறிவிப்பு

*விவசாயிகளுக்கு பனை மதிப்பு கூட்ட பாதுகாப்பு உபரகணங்கள்,கொட்டகை அமைக்க நிதி உதவி

*தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம்
பனை மேம்பாட்டுத் திட்டம்

*பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

*வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்தி பராமரிக்க, ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு    

*சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்காவில் இசைக்கேற்ப அசைந்தாடும் நீரூற்றுகள் அமைக்கப்படும்.

*1.32 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும் வகையில், கடைமடை வரை பாசன நீர் செல்ல ஏதுவாக வாய்க்கால்களை தூர்வார ரூ.5 கோடி நிதி

*உழவன் செயலியில், தனியார் இயந்திரங்கள், பழுது நீக்குவோர் பெயர், விலாசம், கைபேசி எண் விவரங்கள் வட்டார, மாவட்ட வாரியாக இடம்பெறும்

*100 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

*கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை செங்கரும்பு, பேராவூரணி தென்னை உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

*150 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்

*30 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை ரூ.9 கோடி மதிப்பீட்டில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்துடன் இணைக்கப்படும்

*கோயம்புத்தூர் வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்பாடு

*வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு, கூட்டுறவு பயிர்கடனாக ரூ.14,000 கோடி வழங்கப்படும்

*காவிரி படுகை பெரும் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். காவிரி பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்வாய்களை தூர்வார ரூ.100 கோடி ஒதுக்கீடு

*25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் அமைக்கப்படும்.

*50 உழவர் சந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

*1971ல் கலைஞர் கருணாநிதி தொடங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.க்கு ரூ.530 கோடி நிதி ஒதுக்கீடு

*மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும்

*கோயம்புத்தூர் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

*கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் ரூ.15 கோடியில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்

*கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் 22,000 ஹெக்டேரில் வாழை சாகுபடி

*சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ.100 கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும்
*பொது ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ.75 கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும்
*சன்னரக, பொதுரக நெல் கொள்முதலுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

*கால்நடைகளுக்கு பசுந்தீவனங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

*தென்னை உள்ளிட்ட தோட்டங்களில் பசுந்தீவன பயிர்களை ஊடுபயிராக உற்பத்தி செய்ய ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு

*கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதோடு, மேய்ச்சல் நிலங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*ஊட்டச்சத்து மிகுந்த தீவன பயிர்கள் உற்பத்தி செய்ய 60 வேளாண்மை கால்நடை பராமரிப்பு அலுவலர்களுக்கு பயிற்சி

*விவசாயிகளுக்கு ₹14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும்   

*தென்னை உள்ளிட்ட தோட்டங்களில் பசுந்தீவன பயிர்களை ஊடுபயிராக உற்பத்தி செய்ய ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு

*கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதோடு, மேய்ச்சல் நிலங்களையும் அதிகரிக்க நடவடிக்கை

*ஊட்டச்சத்து மிகுந்த தீவன பயிர்கள் உற்பத்தி செய்ய 60 வேளாண்மை கால்நடை பராமரிப்பு அலுவலர்களுக்கு பயிற்சி

*ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் வழங்க ஏதுவாக, ரூ.1500 கோடி ஒதுக்கீடு

*வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், வட்டியில்லா கடன் வழங்க ஏதுவாக, ரூ.1500 கோடி ஒதுக்கீடு

*நாட்டின மீன் வளர்ப்பை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

*23 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை; ரூ.6536 கோடி ஒதுக்கீடு

*மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

*யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு

*பசுமை தமிழக இயக்கம் மூலம் சந்தனம், செம்மரம் தேக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சந்தனம், செம்மரம், தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் நடவடிக்கை

*சென்ற ஆண்டு ரூ.33007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது…இவ்வாண்டு கூடுதலாக ரூ.5897 கோடி நிதி ஒதுக்கீடு. வேளாண்மை துறை திட்டங்கள், அறிவிப்புகளுக்காக நடப்பாண்டில் ரூ.38904 கோடி நிதி ஒதுக்கீடு

*வேளாண் தொழிலுக்கு பணியாளர் பற்றாக்குறை சவாலாக உள்ளது.எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை வேளாண் பணிக்கு ஒதுக்க முன்வர வேண்டும்

*ரூ.6,600 கோடியில் ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து விவசாயம் சார்ந்த இயற்கை வள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும் . தடுப்பணைகள், பண்ணை குட்டைகள், கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்

*ரூ.710 கோடியில், கிராமங்களில் 2, 750 கிலோ மீட்டருக்கு ஊரக சாலைகள் அமைக்கப்படும்

*அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மதி – பூமாலை வளாகத்திலும் சிறுதானிய பொருட்கள் விற்பனை

*அனைத்து மாவட்ட விவசாயிகள் எண்ணிக்கை, சாகுபடி விவரம் மின்னணு முறையில் சேகரிப்பு

*விவசாயிகள் மண் வளம் குறித்து அறிய அனைத்து விவரமும் கணினி மயமாக்கம்

*தனியார் தொழில் முனைவோருக்கு சலுகைகள், ஊக்கத்தொகை, மானியங்கள் வழங்கும் உணவு பதப்படுத்துதல் கொள்கை மறுசீரமைக்கப்படும்

*காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும்.

*திருச்சி – நாகைக்கு இடையே, ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில் பெருந்தடம் திட்டம் செயல்படுத்தப்படும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com