நுங்கு, சப்போட்டா, குக்கீ, கல்கண்டு ஐஸ்க்ரீம்… | `ஜில்லுனு ஒரு வீக் எண்டு'

Share

இன்னும் சில மாதங்களுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரின் சாய்ஸிலும் ஐஸ்க்ரீம் நிச்சயம் இருக்கும். கடைகளில் வாங்கிச் சாப்பிடும் ஐஸ்க்ரீமின் விலையும் தரமும் யோசிக்க வைக்கும். ‘அதுக்காக ஐஸ்க்ரீமை எல்லாம் வீட்டுலயா செய்து சாப்பிட முடியும்’ என்று கேட்கிறீர்களா? ஏன் முடியாது…. வீட்டிலேயே செய்யும்போது  செலவும் மிச்சம். ஆரோக்கியத்தையும் உறுதிசெய்யலாம். இந்த வார வீக் எண்டை விதம் விதமான ஐஸ்க்ரீம்களோடு குளுகுளுவென கொண்டாடுங்கள்…

நுங்கு சோர்பே

தேவையானவை:

நுங்கு – 10

தேன் – அரை கப்

நுங்கு சோர்பே | வீக் எண்டு ஸ்பெஷல்

செய்முறை:

நுங்கை மேல் தோல் எடுத்துவிட்டு, ஒரு மணி நேரம் ஃபிரீஸரில் வைக்கவும். பின்னர் நுங்கு, தேன் இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஃபிரீஸ் செய்யவும். பிறகு இதை ஸ்கூப் செய்து பரிமாறவும்.

சப்போட்டா சோர்பே

தேவையானவை:

நன்கு பழுத்த சப்போட்டா – அரை கிலோ

தேன் – அரை கப்

சப்போட்டா சோர்பே | வீக் எண்டு ஸ்பெஷல்

செய்முறை:

சப்போட்டாவை நன்றாகக் கழுவி, உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு துண்டுகளாக்கவும். பின்னர் இத்துண்டுகளைத் தேனுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஃபிரீஸ் செய்யவும். பின்னர் ஸ்கூப் செய்து பரிமாறவும்.

ஐஸ்க்ரீம் சாண்ட்விச் –  குக்கீ ஐஸ்க்ரீம் சாண்ட்விச்

தேவையானவை:

வெனிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீம் – அரை லிட்டர்

சாக்லேட் சிப் குக்கீஸ் – 12

ஐஸ்க்ரீம் சாண்ட்விச் | வீக் எண்டு ஸ்பெஷல்

செய்முறை:

இங்கே கொடுத்துள்ள செய்முறையின்படி அரை லிட்டர் வெனிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீம் செய்து கொள்ளவும். 12 சாக்லேட் சிப் குக்கீஸை எடுத்துக்கொள்ளவும். அதில் 6 குக்கீஸில் ஒவ்வொன்றின் மேலும் ஒரு ஸ்கூப் வெனிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீம் வைத்து, அதை மற்றொரு குக்கீஸால் லேசாக அழுத்தி மூடவும். இதைக் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் ஃபிரீஸ் செய்து பின்னர் பரிமாறவும்.

பேஸிக் வெனிலா ஐஸ்க்ரீம்

தேவையானவை:

பால் – அரை லிட்டர்

ஃபிரெஷ் க்ரீம் – 750 மில்லி

சர்க்கரை – 300 கிராம்

வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்

பேஸிக் வெனிலா ஐஸ்க்ரீம் | வீக் எண்டு ஸ்பெஷல்

செய்முறை:

பாலோடு க்ரீமை சேர்த்து ஒன்றாகக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு ஆறவிடவும். இதுவே வெனிலா ஐஸ்க்ரீம் பேஸ் ஆகும். இந்த பேஸ் வைத்து நீங்கள் பல ஃபிளேவர்கள் உருவாக்கி கொள்ளலாம்.

இந்த வெனிலா பேஸ் கலவையை ஹேண்ட் பீட்டர் கொண்டு ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் அடித்து அலுமினியப் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃபிரீஸரில் வைத்தால் பேஸிக் வெனிலா ஐஸ்க்ரீம் தயார்.

சாக்லேட் ஃபிளேவர் ஐஸ்க்ரீம் செய்ய…

மூன்று டேபிள்ஸ்பூன் அளவுக்குக் குவியலாக கொக்கோ பவுடரை எடுத்து சிறிதளவு வெந்நீரில் கரைத்து அதை வெனிலா ஐஸ்க்ரீம் பேஸில் கலந்து சாக்லேட் ஃபிளேவர் ஐஸ்க்ரீம் செய்யலாம் அல்லது வெனிலா ஐஸ்க்ரீம் பேஸில் ஒரு டீஸ்பூன் சாக்லேட் எசென்ஸ் சேர்க்கலாம்.

கிரிஸ்டல் ஐஸ்க்ரீம் கேக் சாண்ட்விச்

தேவையானவை:

கல்கண்டு சிறியது – 50 கிராம்

ஸ்பாஞ்ச் கேக் ஸ்லைஸ் – 250 கிராம்

வெனிலா ஐஸ்க்ரீம் – அரை லிட்டர்

சிவப்பு, பச்சை, மஞ்சள் ஃபுட் கலர் – தலா சில சொட்டுகள்

கிரிஸ்டல் ஐஸ்க்ரீம் கேக் சாண்ட்விச் | வீக் எண்டு ஸ்பெஷல்

செய்முறை:

கல்கண்டை நான்கு பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கலரை சொட்டு சொட்டாகச் சேர்த்து கலக்கவும். அதை ஒரு மணி நேரம் உலர்த்தவும். பின்னர் ஸ்பாஞ்ச் கேக் ஸ்லைஸ் உள்ளே வெனிலா ஐஸ்க்ரீமை வைத்து அதைக் கல்கண்டு கலவையில் நான்கு புரட்டவும். இப்படிச் செய்வதால் கல்கண்டு, ஐஸ்க்ரீமில் நன்கு ஒட்டிக்கொள்ளும். இதை ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் ஃபிரீஸ் செய்து பரிமாறவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com