`இரவில் 5 மணி நேரத்துக்கும் குறைவான தூங்கமா? கால் தமனி அடைப்பு இரட்டிப்பாகலாம்’: ஆய்வில் தகவல் | sleeping less than 5 hours may cause clogged leg arteries

Share

லண்டனில் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம்தான் இந்த நோய்க்கு காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பகல் நேர உறக்கத்தை தவிர்ப்பவர்களை விட, பகலில் தூங்குபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 32% உள்ளது. இருப்பினும் இந்த நோய்க்கும் பகல் நேரத்தில் தூங்குவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்பது அறியப்படவில்லை.

இரவு தாமதமான தூக்கம்

இரவு தாமதமான தூக்கம்

எனவே, ஐந்து மணி நேரத்திற்கு மேல் தூங்கும் வகையில் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டு, சுறுசுறுப்புடன் உடற்பயிற்சி மேற்கொண்டு, நல்ல உணவுகளை உட்கொண்டால் இந்த நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரம், அதிகப்படியான தூக்கம் இந்த நோயை குணப்படுத்துமா என்பது தெரிவிக்கப்படவில்லை. அதிக நேரம் தூங்குவது, பகல் நேரத்தில் தூங்குவது போன்றவற்றிற்கும் இந்த நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்பதும் விளக்கப்படவில்லை. இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும் என ஆய்வாளர் ஷுவாய் யுவான் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com