பழங்களை வித்தியாசமான வடிவங்களில் வெட்டிக் கொடுப்பது, வெவ்வேறு நிறங்களில் உள்ள இரண்டு, மூன்று பழங்களைக் கலந்து கொடுப்பது, கார்ட்டூன் வடிவில் அலங்கரித்துக் கொடுப்பது எனறெல்லாம் முயற்சி செய்யலாம்.
தானியங்கள், பருப்புகள், பால், பழங்கள் மற்றும் நட்ஸ், அசைவத்தில் மீன், முட்டை என எல்லாம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பால் குடிக்க அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு தயிராகக் கொடுக்கலாம். தயிரும் பிடிக்காத குழந்தைகளுக்கு பிரெட்டில் சீஸ் தடவிக் கொடுக்கலாம். பனீர் கொடுக்கலாம்.
ஒவ்வொரு குழந்தையின் பசி உணர்வும் வேறுபடும். எல்லா நாள்களிலும் பசி உணர்வானது ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. குழந்தைகள் வளர வளர அவர்களது சுவை உணர்வும் தேர்வும்கூட மாற ஆரம்பிக்கலாம். உங்கள் குழந்தைகள் ஆக்டிவ்வாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் அவர்கள் உடல்நலம் குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

இதைத் தாண்டி குழந்தைகள் ரொம்ப குறைவாகச் சாப்பிட்டால் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் ஆலோசனை பெறலாம். வயதுக்கேற்ற எடையும் உயரமும் இல்லை என்றால் மட்டுமே கவலைப்பட வேண்டும். மற்றபடி வளர்ச்சி சீராக இருக்கும்போது வேறு கவலை தேவையில்லை. காலப்போக்கில் இது தானாகச் சரியாகிவிடும்.
குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னை அடிக்கடி தொடர்வதாக நினைத்தால் குழந்தைகள்நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.