உலகம் முழுவதும் கர்ப்பகால நீரிழிவு நோயின் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கருவில் வளரும் குழந்தையின் வளர்சிதை மாற்றம் காரணமாக, பெண்ணின் உடலில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. 2011-13 ஆம் ஆண்டில் கர்ப்பிணிகளின் நீரிழிவு விகிதம் 4.5% ஆக இருந்தது. அதுவே 2020 ஆம் ஆண்டில் 7.8% ஆக உயர்ந்துள்ளது.
கர்ப்பகால நீரிழிவினால் பல மகப்பேறு சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளன. இதனால் குழந்தை வளரும் போது உடல்பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சந்திக்கும் அபாயமும் உள்ளது.

எனவே, கர்ப்பகால நீரிழிவைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் (North Western) பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பெண்கள் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு அதிக வெளிச்சத்தைப் பார்க்காமல் இருப்பதன் மூலம் நீரிழிவுக்கான அபாயத்தைக் குறைக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.