அன்புஜோதி ஆசிரமம்: `பல மாநிலங்களில் தொடர்பு, கட்டாய மதமாற்றம்’ – தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் | Anbu Jyoti Ashram was investigated by the National Commission for Child Welfare

Share

விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தின் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் 3 வயது குழந்தை இருந்தது தொடர்பாக, தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, விக்கிரவாண்டி தாசில்தார் ஆகியோர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின், இந்த ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்,  சிகிச்சை பெற்று வருபவர்களை ஆனந்த் நேரில் சந்தித்து விசாரித்தார். 

மாவட்ட ஆட்சியர் பழனி, ஆனந்த்

மாவட்ட ஆட்சியர் பழனி, ஆனந்த்

விசாரணைக்கு பின்னர், மீண்டும் குண்டலப்புலியூர் ஆசிரமத்திற்கு வந்த தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் ஆட்சியர் பழனி முன்னிலையில், அன்புஜோதி ஆசிரமத்திலிருந்த இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், “ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டதில்… பாண்டிச்சேரி இல்லாமல் ராஜஸ்தான், திரிபுரா, மேகாலயா, மேற்கு வங்கம், நாகாலாந்து, கொல்கத்தா உள்ளிட்டற்றில் இப்போதைக்கு 5 மாநிலங்களில் சம்பந்தம் இருப்பது தெரிய வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com