இதேபோல 2021-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தபோது ஷமி மீது இதேபோன்ற மத ரீதியிலான தாக்குதல்களை சில கும்பல்கள் செய்தன.

அப்போதைய கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவாக, “மதத்தை வைத்து ஒருவரைத் தாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் பரிதாபத்திற்குரிய செயல். முதுகெலும்பில்லாத சிலர், தனிப்பட்ட நபரைப் பற்றித் தரம் தாழ்ந்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. மதம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியிலான நம்பிக்கை” என்று தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இதுபோன்று ஷமி மீதான மத வெறுப்புத் தாக்குதல் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளதையும், விராட் கோலி பேசியுள்ளதையும் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டுப் பதிவு செய்து கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.