இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ இந்த பாக்டீரியா கிருமிகள் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில், கிச்சன் சிங்க்கை விட இரண்டு மடங்கு கிருமிகளும், கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்களும், செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தைவிட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றன.
ஆய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை ஒப்பிடுகையில், ஸ்குவீஸ் டாப் பாட்டில்கள் (squeeze-top bottles) தூய்மையானவை. மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களை உபயோகிக்கையில், ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சூடான சோப்பு நீரில் கழுவ வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
லண்டன் இம்பீரியல் கல்லூரியில் மூலக்கூறு நுண்ணுயிரியலாளராகப் பணிபுரியும் டாக்டர் ஆண்ட்ரு எட்வர்ட்ஸ் கூறுகையில், `மனித வாயானது பலவித பாக்டீரியாக்களுக்கு இருப்பிடமாக உள்ளது. எனவே குடிநீர் பாத்திரங்கள் நுண்ணுயிரிகளால் நிறைந்திருப்பதில் ஆச்சர்யமில்லை’’ என்று கூறியுள்ளார்.
“பாட்டில்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும், அது அவ்வளவு ஆபத்தானதல்ல. இந்தத் தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்தியதால் ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அதேபோல், குழாய்களும் ஒரு பிரச்னையல்ல…
ஏற்கெனவே மக்களின் வாயில் இருக்கும் பாக்டீரியாவால் தண்ணீர் பாட்டில்கள் மாசுபட வாய்ப்புள்ளது’’ என ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் டாக்டர் சைமன் கிளார்க் விளக்கியுள்ளார்.