கலைஞரின் பெயர் ஏன்?
கலைஞர் தீவிர கிரிக்கெட் ரசிகர். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 90 சதவிகித ஆட்டங்களை நேரில் பார்த்திருக்கிறார். மேலும், 1960 களில் மைதானத்தில் சில பணிகள் நடந்தபோது அப்போதே 15 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். மேலும், சேப்பாக்கம் அவருடைய தொகுதி. அவருடைய பணிகளுக்காகவும் மூத்த அரசியல்வாதி என்கிற அடிப்படையிலும் கலைஞரின் பெயரை அந்த ஸ்டாண்ட்டிற்கு சூட்ட முடிவெடுத்துள்ளோம். எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்கிற பெயரையே ‘கலைஞர் கருணாநிதி ஸ்டேடியம்’ என மாற்றும் திட்டமும் பேசப்பட்டது. என். சீனிவாசனும் அந்த பெயர் மாற்றத்தில் ரொம்பவே ஆர்வமாக இருந்தார். ஆனால், முதலமைச்சர் அப்படி பெயரை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். உடனேதான் ஒரு ஸ்டாண்ட்டுக்காவது கலைஞரின் பெயரை சூட்டலாம் என முதல்வரிடம் சொன்னோம். அதற்கு மட்டும் முதல்வர் ஒப்புக்கொண்டார்.”
சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் என்னென்ன விஷயங்களை செய்யவிருக்கிறீர்கள்?
“இந்த ஸ்டாண்ட் திறப்புவிழா முடிந்தவுடன் மைதானத்திற்குள்ளேயே இரண்டு அருங்காட்சியகங்களை அமைக்கும் பணிகளுக்காக அரசிடம் அனுமதி கேட்கவிருக்கிறோம். வெளிநாட்டு மைதானங்களில் ‘Stadium Tour’ என்ற பெயரில் ரசிகர்களுக்கு மைதானத்தை முழுமையாகச் சுற்றிக்காட்டும் வசதிகளெல்லாம் இருக்கிறது. இங்கேயும் அதேபோன்ற ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்தவிருக்கிறோம். போட்டிகள் இல்லாத சமயத்தில் ரசிகர்கள் ஸ்டேடியம் டூர்க்காக அனுமதிக்கப்படுவார்கள்.