Doctor Vikatan: பலமணி நேரம் நீடிக்கும் விக்கல்…. அறுவைசிகிச்சையில்தான் குணப்படுத்த முடியுமா? | Doctor Vikatan: Hiccups that last for several hours can be cured by surgery?

Share

விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும். மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும். கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும். ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும்.

இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் ( Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும்.

Hiccups (Representational Image)

Hiccups (Representational Image)
Pixabay

மூக்கு வழியே வயிற்றுக்குள் டியூப் விட்டு ஒரு சிகிச்சை செய்வார்கள். உதரவிதானத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பில் அனஸ்தீசியா கொடுப்பதன் மூலமும் விக்கலை நிறுத்தச் செய்வார்கள்.

இதயத்துக்கு பேஸ் மேக்கர் வைப்பதைப் போல உதரவிதானத்துக்கும் பேஸ்மேக்கர் வைக்கலாம். அது உதரவிதானம் சீராக இயங்க உதவி, விக்கலையும் தடுக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com