* சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டால் அவற்றின் பாதிப்புகளை பொதுமக்கள்தான் தாங்க வேண்டும். ஆனால், அது மக்களால் இயலாதது. பாமக நிறுவனர் ராமதாஸ்* பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு முதல்வர் பாடம் புகட்ட வேண்டியது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்* கொரோனாவை இந்தியா கையாண்ட விதம் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* இலங்கை காற்றாலை திட்ட ஒப்பந்தத்திற்கு அதானி குழுமம் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மவுனத்தை கலைக்க வேண்டும். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
சொல்லிட்டாங்க…
Share
