கிரிக்கெட்: இந்தியாவை சோதித்த ஆஸ்திரேலியா – மைதானத்துக்கு ஆஸி. பிரதமருடன் வந்த நரேந்திர மோதி

Share

நரேந்திர மோதி

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு,

இந்திய, ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் கைகோர்த்து உற்சாகமூட்டும் இரு நாடுகளின் பிரதமர்கள்

ரஹானே தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணிலேயே இந்தியா பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொரை வென்றது நினைவிருக்கிறதா? அந்த தொடரில் இந்தியா மகுடம் சூடியபோது நாடே கொண்டாடியது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் அதை கச்சிதமாக நிகழ்த்திக் காட்டினார் அஹிங்கியா ரஹானே.

அந்த தொடர் அளித்த பரபரப்பு தற்போது மீண்டும் தொற்றியிருக்கிறது. இந்த முறை ஆமதாபாத்தில்….

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. ஆனால் இந்தூர் டெஸ்ட் இந்தியா பக்கம் வீசிய மகிழ்ச்சிக் காற்றை திசை திருப்பியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com