வெள்ளரிக்காய் சப்பாத்தி டிரை பண்ணிருக்கீங்களா..? சம்மருக்கு ஏற்ற டிஷ்.. ரெசிபி இதோ..!

Share

கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா..? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா.? கவலையை விடுங்க.. உங்களின் இரண்டு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்

வெள்ளரிக்காய் – 1

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய் – 4

மஞ்சள்தூள் – 1/2 tsp

கரம் மசாலா தூள் – 1/2 tsp

சீரக தூள் – 1/2 tsp

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி தழை – 1/4 கப்

உப்பு – 1 1/2 tsp

எண்ணெய் – 1/4 tsp

செய்முறை :

முதலில் மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய், பச்சைமிளகாய் , இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியா நறுக்கி பேஸ்ட் பதத்தில் கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்துக்கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் அரைத்த பேஸ்ட் விழுதையும் சேர்த்துக்கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது எப்போதும்போல் சப்பாத்தி மாவுக்கு பிசைவதுபோல் பிசையுங்கள். அதில் இருக்கும் ஈரப்பதமே சரியாக இருக்கும்.

அடுத்ததாக அவற்றை சிறு சிறு உருண்டைகளாக போட்டு சப்பாத்தி கட்டையில் உருட்டி சுட்டு எடுத்தால் வெள்ளரிக்காய் சப்பாத்தி தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com