T20: அயர்லாந்தை ‘அயர்ச்சி’யில் ஆழ்த்திய இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா

Share

மகளிர் டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

அயர்லாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

அயர்லாந்துக்கு சோர்வை கொடுத்து, தனி ஆளாக களத்தில் அதிரடி காட்டியிருக்கிறார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. 56 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார்.

இந்தியாவுக்கு வாழ்வா சாவா ஆட்டம்

அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. முன்னதாக பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த இந்தியா, பலம் வாய்ந்த இங்கிலாந்திடம் தோற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 2ம் இடம் வகிக்கிறது. அயர்லாந்தை வெல்லும் பட்சத்தில் புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். அதேசமயம், மறுபுறம் அயர்லாந்து அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஹர்மன் ப்ரீத்துக்கு இது 150வது டி20 ஆட்டம். மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை எனும் பெயர் பெற்றிருக்கிறார் ஹர்மன் ப்ரீத் கவுர்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com