ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை எலிகளிடம் செலுத்தி பரிசோதனை… ஆய்வு முடிவு சொல்வதென்ன? | Male contraceptive pills research on rats makes sperm immobilized for 3 hours

Share

சோதனையும் முடிவும்

எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வில், `TDI-11861 எனப்படும் மருந்தின் டோஸ் கொடுக்கப்பட்டது. இது இனச்சேர்க்கையின் போதும் அதற்குப் பின்னரும், விந்தணுக்களை அசைய விடாமல் சுமார் 3 மணி நேரம் தடுத்துள்ளது. 

3 மணி நேரத்திற்குப் பின் இயக்கம் திரும்பி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குப் பிறகே அடுத்த விந்தணுக்கள் இயல்பாகச் செயல்படும் நிலைக்குத் திரும்பியுள்ளன. 

ஆண்களுக்கான கருத்தடை முறைகளைப் பொறுத்தவரை காண்டம் மற்றும் வாஸெக்டமி என இரண்டு முறைகள் மட்டுமே உள்ளன. அப்படியெனில் ஆண்களுக்கான கருத்தடை விருப்பங்கள் போதிய அளவில் இல்லை என்றே கூற வேண்டும். இப்படியிருக்கும் பட்சத்தில், இந்தச் சோதனையின் முடிவுகள் ஆண்களுக்கான விருப்பத் தேர்வாக இருக்கும். 

ஆராய்ச்சியாளரின் விளக்கம்

நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மெடிசினில் ஆராய்ச்சியாளராக இருக்கும், டாக்டர் மெலனி பால்பாக் (Melanie Balbach) கூறுகையில், `தீவிரமாகச் செயல்படும் கரையக்கூடிய அடினிலைல் சைக்லேஸ் (எஸ்ஏசி) மட்டுப்படுத்திகள்  தற்காலிகமாக ஆண் எலிகளை மலட்டுத்தன்மையாக்கின. இவை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் வேலை செய்கின்றன. இந்த முறை கருத்தடை மீளக்கூடிய, பயன்படுத்த எளிதானது.  

ஆனால் இது பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்காது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு ஆணுறைகள் தேவைப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் இவை மனிதர்களில் சோதிக்கப்படவில்லை. மனித பயன்பாட்டிற்கு வர இன்னும் பல வருடங்கள் எடுக்கும். மனிதர்களுக்கு இந்தச் சோதனை செய்வதற்கு முன்பு முயல்களில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்தான தகவல்கள் நேச்சர் கம்யூனிகேஷனில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com