Madurai k.pudur r.c.school Poll booth voter complaints to election officer – News18 Tamil

Share

துரை நகரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், கே.புதூர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு புகார் எழுந்துள்ளது.

கே.புதூர் மண்மலைசாமி தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண் தன் கணவரோடு வாக்களிக்க வந்துள்ளார். கணவருக்கு ஓட்டு இருந்த நிலையில் மனைவியின் ஓட்டை வேறு யாரோ ஏற்கனவே செலுத்தி விட்டதாக ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினியும் அவரது கணவரும் ஏஜென்டுகள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததோடு தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

பிரியதர்ஷினி எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தைக் குறிப்பிட்டு எனது வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை விசாரித்து நான் வாக்களிக்க அனுமதி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நகர்ப் பகுதியில் நல்லமுறையில் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் புதூர் வாக்குச்சாவடியில் எழுந்துள்ள கள்ள ஓட்டு புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : மு.முத்துக்குமரன்- மதுரை

உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)

Published by:Manosoundar M

First published:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com