“மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை PHESGO மருந்து மேம்படுத்தும். சிகிச்சைக்கான நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு வசதியையும் வாழ்க்கைத் தரத்தையும் வழங்கும். நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் இப்போது மருத்துவமனையில் குறைவான நேரத்தைச் செலவிட்டாலே போதும்” என்று ரோச் பார்மா இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வி சிம்ப்சன் இம்மானுவேல் கூறியுள்ளார்.
இந்த மருந்தின் வரவானது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குக் குறைவான தயாரிப்பு மற்றும் நிர்வாக நேரமே தேவைப்படுகிறது.

PHESGO என்கிற இந்த மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முதன்முதலில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதே கோவிட் தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் இருந்த 2020 ஜூன் மாதத்தில்தான். பின்னர் 2020 டிசம்பரில் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (EMA) அங்கீகாரம் அளித்தது.
இந்தியாவில் இந்த மருந்துக்கான அங்கீகாரம் அக்டோபர் 2021-ல் கிடைத்தது. ஜனவரி 2022-ல் இறக்குமதி உரிமம் வழங்கப்பட்டது.
உலக அளவில், டிசம்பர் 2021 நிலவரப்படி, 17,000 மார்பகப் புற்றுநோயாளிகள் PHESGO மூலம் பயனடைந்துள்ளனர் என்று ரோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.