தேவையான பொருட்கள் :
புளி – சிறிதளவு
எண்ணெய்
கடுகு
மஞ்சள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தே.அ
அரைக்க
மிளகு – 2 tbsp
சீரகம் – 1 tbsp
வெந்தயம் – 1/2 tsp
பூண்டு – 10 பல்
செய்முறை :
முதலில் புளியை சுடு தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் நன்கு கரைத்து வடி கட்டிக்கொள்ளவும்.
அடுத்ததாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ளதை அரைத்துக்கொள்ளவும்.
இப்போது கரைத்த புளி கரைசலில் அரைத்த விழுது, மஞ்சள், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். உப்பு , புளிப்பு சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளவும்.
உடல் எடையை குறைக்க உதவும் 5 கடலை மாவு ரெசிபீஸ்..!
இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். பின் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.
அடுத்ததாக கரைத்த புளி கரைசலை அதில் ஊற்றுங்கள்.
பின் நுரை பொங்கி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தட்டுப்போட்டு மூடி விடுங்கள். அவ்வளவுதான் தக்காளியே இல்லாமல் ரசம் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.