உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 105 வயதாகும் தன் மாமியாரை அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில் வசிக்கும் பகவான் பாலி என்பவரின் மனைவி, ஆர்த்தி குப்தா. இவர், பகவான் பாலியின் 105 வயதாகும் தாய் ஜெயராம் தேவியைத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, மாமியாரைத் துன்புறுத்திய மருமகளைக் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவில், வயதான பெண் ஒருவரை இன்னொரு பெண் மோசமாகத் தாக்குவதும், சில நேரங்களில் அவர் தலைமுடியைப் பிடித்து தரையில் முட்டுவதுமான காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கின்றன. இதனை, அக்கம்பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாகியுள்ளது.