இதையடுத்து திமுக, அதிமுக முகவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரவித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால் பாஜக முகவர் வாக்கு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜக முகவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பாஜக முகவர் கிரிராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை மேலூர் நகராட்சியில் ஹிஜாப் சர்ச்சை எழுந்த 8வது வார்டில் பாஜகவுக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. மேலூர் அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை 3 நகராட்சி வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. 9 பேரூராட்சிகளில் திமுக 7 வார்டிலும் அதிமுக 1 மற்றும் சுயேச்சை ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.