77 வேட்பாளர்களுக்காக கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு

Share

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என பிரிக்கப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 286 கட்டுப்பாட்டுக் கருவிகள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது, 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. எனவே கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணியில், திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் சரியாக இருக்கும் இயந்திரங்கள் மட்டுமே தேர்வு செய்து 77 வேட்பாளர்களின் சின்னங்களையும் பொருத்தும் பணி நடக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com