70 வயதிற்கு முன்பே நிகழும் தொற்றாநோய் இறப்புகள்… காரணம் என்ன? அதிர வைக்கும் WHO அறிக்கை!|Non communicable disease affects before 70 year old – WHO report

Share

* ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பின்மை, புகையிலை பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றால் இத்தகைய நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. 

* தொற்றாநோய்களால் ஆண்டுதோறும் 41 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் 74 சதவிகித இறப்புகளுக்குச் சமம்.

*இதய நோய்களால் 17.9 மில்லியன் மக்களும், புற்றுநோயால் 9.3 மில்லியன் மக்களும், நுரையீரல் நோய்களால் 4.1 மில்லியன் மக்களும், நீரிழிவால் 2.0 மில்லியன் மக்களும் இறக்கின்றனர். 

*ஆண்டுதோறும் 8 மில்லியன் இறப்புகள் புகையிலை பழக்கத்தால் நிகழ்கின்றன. இதில் பாசிவ் ஸ்மோக்கர்களின் இறப்பும் அடக்கம். அதாவது புகைப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு அந்தப் புகையால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பது.

*அதிகப்படியான உப்பின் பயன்பட்டால் ஆண்டுதோறும் 1.8 மக்கள் இறக்கின்றனர். 

*கேன்சர் மற்றும் மது குடிப்பதால் ஆண்டுதோறும் 3 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இறக்கின்றனர். 

*போதுமான உடல் செயல்பாடு இல்லாததன் காரணமாக ஆண்டுதோறும் 8,30,000 இறப்புகள் நிகழ்கின்றன. 

*தொற்றாநோய்களின் அதிகப்படியான இறப்புக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு, உடல் பருமன் அதிகரிப்பு, குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு போன்ற வளர்சிதை மாற்றமும்  காரணங்களாக அமைகின்றன. 

அத்துடன், வறுமையோடு தொற்றாநோய்களுக்கு தொடர்பு உள்ளது. ஏனெனில் தொற்றாநோய்கள் வருமானம் குறைவாக உள்ள நாடுகளையே அதிகமாக பாதித்துள்ளன. தனிநபர் மற்றும் சமூகத்தில் தொற்றாநோய்களின் தாக்கத்தைக் குறைக்க, தொற்றாநோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும்” என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com