6ixty: மேற்கிந்தியத் தீவுகளில் புதிதாகத் தொடங்கும் 10 ஓவர் கிரிக்கெட் – இப்படியெல்லாம் விதிமுறைகளா? | West Indies to host a T10 tournament called 6ixty

Share

1. ஒரு அணிக்கு 6 விக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி.

2. ஒரு அணி 60 பந்துகள் என பத்து ஓவர்கள் ஆட வேண்டும்.

3. முதல் 2 ஓவர்கள் பவர்பிளே.

4. அந்த 12 பந்துகளில் 2 சிக்ஸர் அடிக்கப்பட்டால் மூன்றாவது பவர்பிளே 3-9 ஓவர்களில் எப்போது வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தலாம்.

5. குறிப்பிட்ட நேரத்திற்குள் 54 பந்துகளை, அதாவது 9 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு வீரர் பௌலிங் செய்யும் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

6. ஒரே இன்னிங்ஸில் 5 ஓவர்கள் ஒருமுனையிலும், அடுத்த 5 ஓவர்கள் இன்னொரு முனையிலும் இருந்து வீச வேண்டும்.

7. ரசிகர்கள் ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ‘Mystery free hit’ என்னும் பந்தினை வாக்களித்துத் தேர்ந்தெடுப்பர்.

இந்தத் தொடரில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவரும் பங்கேற்கின்றனர். ஆண்கள் தரப்பில் டிரினிடாட், பார்படாஸ், கயானா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், செயின்ட் லூசியா, ஜமைக்கா என 6 அணிகள் கலந்து கொள்கின்றன. பெண்கள் தரப்பில் டிரினிடாட், பார்படோஸ், கயானா என மூன்று அணிகள் கலந்து கொல்கின்றன. இதைத் தொடர்ந்து CPL தொடரும் தொடங்கவுள்ளது.

6IXTY தொடரின் அனைத்து போட்டிகளும் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ‘UNIVERSE BOSS TROPHY’ என்று கிறிஸ் கெயில் பெயரிலான கோப்பை வழங்கப்படவுள்ளது. இத்தொடரின் தூதராக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் என்று சொன்னவுடன் பெரும்பாலானவர்களுக்கு கெயிலின் அதிரடி ஆட்டம்தான் நினைவிற்கு வரும். அவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com