6 people including policewoman injured in Clash at temple festival near Madurai

Share

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள வாலாந்தூர் கிராமத்தில் குறிப்பிட்ட வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 10ம் தேதி நடைபெற்றது. 

இன்று (செவ்வாய்கிழமை) இக்கோயிலின் 48வது நாள் பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.  கோயிலுக்கு பாத்தியப்பட்ட வகையறாக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பால் குடம் எடுத்தும், முளைப்பாரி ஏந்தியும் ஊர்வலமாக வந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதில் ஒரு பிரிவினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய நிலையில் மற்றொரு தரப்பினரும் முளைப்பாரி பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். அவர்களும் முதல்மரியாதை கேட்டு தகராறு செய்த நிலையில், ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் விட மறுத்தனர்.

இதனால் இரு தரப்பினரிக்கிடையே கடுமையான மோதல் ஏற்ப்பட்டது. கோவிலில் தூணில் கட்டியிருந்த கம்புகளை பிடுங்கி இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் கோவில் வளாகமே போர்க்களமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்து வந்த வாலாந்தூர் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.

இந்த மோதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் மேனகா உட்பட வாலாந்தூரைச் சேர்ந்த  மலர்விழி, பாண்டி, சங்கிலி பாண்டி, வீர ராகவன், கல்யாணி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்தனர்.

Also Read : மாணவிகளின் தொடர் தற்கொலைகள்… மூலக்காரணம் என்ன? தீர்வுக்காக அரசு அமைப்புகள் செய்ய வேண்டியது என்ன?

தற்போது இவர்கள் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com