570 வீடுகளில் விரிசல்… பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் உத்தரகாண்ட் மக்கள்!

Share

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம், கடலில் இருந்து 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உண்டு. இப்பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவால், 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் புதைந்து வருகின்றன.

உத்தரகாண்ட் முதல்வர் – புஷ்கர் தாமி

நிபுணர்களின் அறிக்கையைப் பெற்று, அதற்கான திட்டத்தைத் தயாரித்த பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியை அம்மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்க்க உள்ளார். திக்கற்ற மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 60 குடும்பங்கள் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அப்பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தங்களது பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். அனைத்து வீடுகளும் மாநகராட்சி மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

நிலநடுக்கம்

இந்த பாதிப்பு குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “வரும் நாள்களில் ஜோஷிமத்திற்கு சென்று, நிலைமையைக் கையாள நடவடிக்கை எடுப்பேன். அனைத்து அறிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிப்பு குறித்து மாநகராட்சி தலைவர் ஷைலேந்திர பவாரிடம் பேசியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.  

நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் நிலத்தடியில் இருந்து நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com