`சாவுக்குப் பிறகு என்ன நடக்கும்…’ இன்னும் மனிதகுலம் கண்டுபிடிக்காத மர்ம முடிச்சு இது.
சொர்க்கம், நரகம் என்ற ஒன்று உண்டா, இல்லையா என்பதெல்லாம் இறந்தவர்கள் வந்து சொன்னால்தான் உண்டு. ஆனால், இறந்துவிட்டார் என முடிவு செய்த ஒருவர், சில மணிநேரம் கழித்து எழுந்து அமர்ந்து, தான் உணர்ந்தவற்றை பிரமிப்புடன் கூறும் ஆச்சர்ய சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு.

இங்கிலாந்தைச் சேர்ந்த கிர்ஸ்டி போர்டோஃப்ட், தன் பார்ட்னர் ஸ்டூ மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வருகிறார். அந்த இரவை அவர் தன் குடும்பத்தினருடன் கொண்டாட இருந்திருக்கிறார். ஆனால், சோபாவில் அவர் உயிரற்ற நிலையில் இருப்பதை ஸ்டூ கண்டிருக்கிறார்.
ஸ்டூ, மருத்துவர்களிடம் தன் மனைவியை தூக்கிச் செல்ல, அவர் உயிர்பிழைக்க 6% வாய்ப்பு மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், தன் மனைவி கிரிஸ்டிக்கு அடுத்தடுத்து மாரடைப்பு வந்தபோதும் அவர் கணவர் நிதர்சனத்தை ஏற்கவில்லை. இன்னொரு பக்கம், இறுதி வேலைகளைப் பார்க்கச் சொல்லி மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
ஆனால், அடுத்தடுத்த உடல்நல பாதிப்புகளால் மருத்துவரீதியாக உண்டாக்கப்பட்ட கோமா நிலைக்குச் சென்று, சாவுக்கு மிக அருகில் 40 நிமிடங்கள் இருந்த கிரிஸ்டி, யாரும் எதிர்பார்க்காத வகையில் உயிர் பிழைத்துள்ளார். அந்த 40 நிமிட இடைவெளியில் கிர்ஸ்டி பல்வேறு விஷயங்களை உணர்ந்ததாக, தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் தான் தன் மனக்கண்ணில் பார்த்ததாகக் கூறுகையில், `என் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது. ஆனால், என் சகோதரியைத் தொடர்புகொண்ட, மனநல நிபுணரான என் தோழி அங்கு என்ன நடக்கிறது எனக் கேட்டார்.