03
பழங்களை வெட்டி வைப்பது : பொதுவாக பழங்களை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும் என்பார்கள். இதனால் அதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறையாமல் அப்படியே முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கும். ஆனால், பலர் பழங்களை வெட்டி வைத்து, நீண்ட நேரம் கழித்து சாப்பிடுகின்றனர். இப்படி செய்வதால், இதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறைவதோடு, பழத்தின் சுவையும் மாறி விடும். சிலர் பழங்களை வெட்டி, பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடுகின்றனர். இதுவும் உடலுக்கு நல்லதல்ல. எனவே, பழங்களை வெட்டிய உடனேயே சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கமாகும்.
