4 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

Share

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ், நிகாத் ஜரீன், சாவீட்டி பூரா உள்ளிட்ட 4 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

13 ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, நிகாத் ஜரீன், நீது கங்காஸ், மனீஷா உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

புதன்கிழமை நடந்த போட்டியில், 48 கிலோ பிரிவில் ஜப்பான் வீராங்கனை மடோகா வாடாவை, காமன்வெல்த் சாம்பியனான நீது கங்காஸ் எதிர்கொண்டார். அதில், ஆக்ரோஷமாக விளையாடிய நீது கங்காஸ் வெற்றியை தன் வசப்படுத்தினார். நீது கங்காஸை தொடர்ந்து, 50 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன், தாய்லாந்து வீராங்கனை சுத்தாமத் ரக்சத்தை (Chuthamat Raksat) எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு நிகாத் ஜரீன் முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க:  ஐபிஎல் Impact Player-ஆக இவர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும்.. பிசிசிஐயின் புதிய விதிகள் என்னென்ன?

இவரை தொடர்ந்து, 3 முறை ஆசியப் பதக்கம் வென்ற சாவீட்டி பூரா, 81 கிலோ எடைப்பிரிவில், பெலாரஸின் விக்டோரியா கெபிகாவாவுக்கு (Viktoria Kebikava) எதிராக 5-0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்தார். நீது கங்காஸ், நிகாத் ஜரீன், சாவீட்டி பூரா ஆகிய 3 வீராங்கனைகள் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேற்றி இருந்தனர்.

இந்த நிலையில் லவ்லினா போர்கோஹைன்,நிது கங்காஸ், நிகாத் ஜரீன் மற்றும் சவீதி பூரா உள்ளிட்ட 4 இந்திய வீரங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதனால் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com