311 லிட்டர், 5 அடி உயரம், 1.3 மில்லியன் டாலரைத் தாண்டும் விலை – உலகின் மிகப்பெரிய மது பாட்டில்! | This world’s largest bottle of Whiskey is all set to be auctioned in UK

Share

ஸ்காட்லாந்தில் உள்ள ‘Fah Mai Holdings Group Inc. & Rosewin Holdings PLC’ என்ற நிறுவனம் கடந்த 2021-ல் உலகின் மிகப்பெரிய மது பாட்டிலைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. 5 அடி 11 இன்ச் உயரம், 311 லிட்டர் வரை கொள் அளவு கொண்ட இந்த பாட்டில் வழக்கமான அளவு கொண்ட 444 விஸ்கி பாட்டிலின் எண்ணிக்கைக்குச் சமம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 32 வருடங்கள் பழைமையான பிரபல ‘தி மெக்கேலான் (The Macallan)’ ஸ்காட்ச் மது பாட்டிலான இது, வரும் மே மாதம் 25-ம் தேதி அன்று லியான் & டர்ன்புல் என்ற இடத்தில் ஏலம் விடப்படவுள்ளது. 1.3 மில்லியன் டாலர் என ஆரம்பமாகும் இதன் தொடக்க விலை, இதற்கு முன்னர் அதிகமான விலைக்கு ஏலம் போன 1.9 மில்லியன் டாலர் மது பாட்டிலின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஏலத் தொகையில் 25 சதவிகித தொகை மேரி கியூரி (Marie Curie) அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய மது பாட்டில் - கின்னஸ் சாதனை

உலகின் மிகப்பெரிய மது பாட்டில் – கின்னஸ் சாதனை

லியோன் & டர்ன்புல்லின் நிறுவனத்தின் சார்பாக இந்த ஏலத்தை வழிநடத்தும் கொலின் ஃப்ரேசர் (Colin Fraser) என்பவர், இந்த ஏலத்தைப் பற்றி கூறுகையில், “இந்த ஏலத்தில் உலகளாவிய ஆர்வம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். 5 அடி 11 இன்ச் உயரம் கொண்ட இந்த பாட்டில் நம்பமுடியாத சாதனை படைத்து முன்னணியில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பாட்டிலை வாங்க ஏலதாரர்களுக்கு ஒரு வாய்ப்புக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் 32 வருடங்கள் பழைமையான பிரபல ‘தி மெக்கேலான் (The Macallan)’ ஸ்காட்ச்சின் உரிமையாளர்களாக மாறுவார்கள்” என்று கூறினார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com