“கோடைக்காலத்திலும் வசந்த காலத்திலும் உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படுவது சகஜம். குறைவான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததன் விளைவாக சிறுநீர் அதிகளவு செறிவூட்டப்படுகிறது. இதனால் தாதுக்கள் ஒன்றிணைந்து கற்களாக மாறுகின்றன.
சியோவுக்கு தண்ணீர் குடிக்கப் பிடிக்காததால் அதற்கு பதிலாக Bubble Tea-ஐ மட்டும் குடித்திருக்கிறார். (தைவானில் இந்த டீ பிரபலம்).
தைவானில் 9.6 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளில் சிறுநீரக கற்கள் உண்டாகும் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
சிறுநீரக கற்களின் பாதிப்பு பொதுவாக 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களிடம் காணப்படும்’’ என்று சியோவுக்கு அறுவை சிகிச்சை செய்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் லிம் சை-யாங் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அப்பெண் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எந்த உடல்நலக் குறைவின் போதும் பலரும், `தண்ணிய நல்லா குடிச்சா இந்தப் பிரச்னையெல்லாம் வருமா… தண்ணிய குடி, தண்ணிய குடி” என்று கூறிக் கேட்டு இருப்போம். பல உடல்நல சிக்கல்களை சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமாகவே நம்மால் தடுத்து விட முடியும். அந்த வகையில் இயற்கை நமக்கு கொடுத்துள்ள திரவ அமிர்தம் தண்ணீர்…
சரி போய் தண்ணிய குடிங்க!