காலையில் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் அதைச் செய்ய அதிக நேரம் இருக்காது. ஆனால் காலையில் சாப்பிடும் உணவு தான் நாள் முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்ற கவலையும் ஓடிக்கொண்டே இருக்கும்.
இப்படி குழப்பங்கள் வரும்போது அதற்கு தீர்வு அளிக்கத்தானே நாங்கள் இருக்கிறோம். தயார்செய்து சமைக்க வெறும் 30 நிமிடங்கள் ஆகக்கூடிய பன்னீர் புர்ஜி செய்வதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையைத் தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
பனீர் புர்ஜி தேவையான பொருட்கள்:
-
500 கிராம் பனீர்
-
1 கிலோ தக்காளி
-
2 டீஸ்பூன் நெய்
-
2 பிரிஞ்சி இலைகள்
-
3 முழு சிவப்பு மிளகாய்
-
5 ஏலக்காய்
-
4-5 கிராம்பு
-
2 கருப்பு மிளகு
-
3 தேக்கரண்டி பூண்டு விழுது
-
1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது
-
2 டீஸ்பூன் சீரகம்
-
பச்சை மிளகாய், நறுக்கியது
-
1 வெங்காயம், நறுக்கியது
-
1 தேக்கரண்டி கசூரி மேத்தி
-
1 கப் முந்திரி விழுது
-
1/2 கப் கிரீம்
-
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
-
1 தேக்கரண்டி சீரக விதை தூள்
-
2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்,
-
உப்பு சுவைக்கு ஏற்ப
-
எலுமிச்சை சாறு
பனீர் புர்ஜி செய்முறை:
பாதி பனீரை க்யூப்ஸாக வெட்டி, மற்ற பாதியை பொடியாக நறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டு விழுது, உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து மரைனேட் செய்யவும்.தக்காளியை நாலாக வெட்டிவைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, பிரிஞ்சி இலைகள், முழு சிவப்பு மிளகாய், ஏலக்காய், கிராம்பு, கருப்பு மிளகு, பூண்டு விழுது மற்றும் இஞ்சி விழுது சேர்க்கவும்.
இதையும் பாருங்க :
அரேபியன் கோஃப்டா கபாப் ரெசிபியை 30 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம்..!
பூண்டு பழுப்பு நிறமாக மாறியதும், தக்காளி, உப்பு சேர்த்து குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். தக்காளி கலவையை அரைத்து வடிகட்டவும். முந்திரியை அரைத்து சேர்த்துக் கலக்கவும். குறைந்த தீயில் சிறிது நேரம் வேகவைத்து, அதில் துருவிய பனீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். பூண்டு பழுப்பு நிறமாக மாறும் போது, வெங்காயம் சேர்க்கவும்.வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், மிளகாய் தூள், சீரகத்தூள், கசூரி மேத்தி தூள், தக்காளி-முந்திரி விழுது, கிரீம் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
நீரிழிவு நோயாளிகள் மது அருந்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது !
இப்போது பனீர் க்யூப்ஸைச் சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். பிறகு அரைத்த பனீர் கலவையில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :