சில பேருக்குச் சிலவற்றின் மீது அலர்ஜி இருக்கும். உதாரணத்துக்கு, சிலருக்குப் பூனை அலர்ஜியாக இருக்கும், சிலருக்குத் தூசி அலர்ஜியாக இருக்கும், ஒரு சிலருக்கு சில மாத்திரைகள் அலர்ஜியாக இருக்கும். இப்படிப் பல அலர்ஜிகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதிலிருந்து தப்பிக்க அந்தச் சூழலில் சிக்கிக்கொள்ளாமல் முன்கூட்டியே தடுத்துவிட்டால் போதும்.
ஆனால், புவியீர்ப்பு விசையின் மீது ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் என்ன செய்வது… சிந்தித்துப் பார்க்கவே சற்று சிரமமாக உள்ளதல்லவா..?
அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது லிண்ட்சி ஜான்சன் என்ற பெண் கடற்படையில் வேலை செய்து வந்துள்ளார். 2015-ம் ஆண்டில் அவருக்கு வயிற்றுவலியும், முதுகு வலியும் ஏற்பட்டுள்ளன. வாந்தி, ஒரு நாளிலேயே 10 முறை மயக்கம் என இந்த அறிகுறிகள் மோசமாகியுள்ளன.