2035- க்குள் உலக மக்கள்தொகையில் 50%- கும் அதிகமானோர் பருமனாக இருப்பார்கள்: ஆய்வில்தகவல் | 50 per cent of the global population will be obese by 2035

Share

உடல் எடை பாதிப்பால் 3% உலக பொருளாதாரம் பாதிக்கப்படும். கிட்டத்தட்ட, ஆரம்ப காலத்தில் கொரோனாவால் உலகம் சந்தித்த பொருளாதார பாதிப்புக்கு இணையாக இந்த பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2035-ம் ஆண்டுக்குள் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் இருமடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

குறிப்பாக ஏழ்மையான நாடுகள் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்படும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அடங்கும். மற்ற ஏழ்மையான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 11% பேருக்கு மட்டுமே உடல் பருமன் உள்ளது, 5.2% பெரியவர்களும் மிகவும் கவலையளிக்கும் வகையில் இதில் இருமடங்கு கிட்டத்தட்ட9.1% குழந்தைகளும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 183 நாடுகளில் 99-வது இடத்தில் இந்தியா உள்ளது.

உடல் பருமன்

உடல் பருமன்

“உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களும் கொள்கை வகுப்பாளர்களும் இளையதலைமுறையினருக்கு உடல்நலம், சமூக மற்றும் பொருளாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளை இளைஞர்களிடம் தீவிரமாகக் கொண்டு செல்வதே இதைத் தடுக்க ஒரே தீர்வு. இப்போது ஒன்றாகச் செயல்பட்டால், எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ வாய்ப்பு உள்ளது” என்று உலக உடல் பருமன் கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் பார் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com