பெயின் கில்லர் இல்லாமல் பீரியட்ஸ் வலியை சமாளிக்க முடியாதா? | Are there ways to deal with period pain without relying on painkillers?
ஹாட் வாட்டர் பேக் (Hot water bag) கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்கும். இரவில் படுக்கச் செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலுக்கு இதமான உணர்வையும், நல்ல உறக்கத்தையும் தரும்.மாதவிடாய் நாள்களில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்றொரு பொதுக்கருத்து உள்ளது. ஆனால், அதை அப்படியே பின்பற்றாமல், அவரவர் உடல் ஒத்துழைத்தால் தாராளமாக வொர்க் அவுட்செய்யலாம்.உடற்பயிற்சி செய்யும்போது சுரக்கும் எண்டார்ஃபின் (Endorphin) ஹார்மோன் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. அதேபோல சிலவகை யோகாசனங்களும் ( (Cat-Cow…









