Rishabh Pant : 'ஜித்தேஷை அவுட் ஆக்கிய திக்வேஷ்; பெருந்தன்மை காட்டிய பண்ட்!' – என்ன நடந்தது?
‘பெங்களூரு வெற்றி!’லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் திக்வேஷ் ரதி செய்த நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் பேசுபொருளாகியிருக்கிறது. களத்தில் என்ன நடந்தது?ஜித்தேஷ் சர்மா’திக்வேஷின் நான் – ஸ்ட்ரைக்கர் ரன் அவுட்!’போட்டி முக்கியமான பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது. 17 வது ஓவரை திக்வேஷ் ரதி வீசியிருந்தார். பெங்களூரு சார்பில் ஜித்தேஷ் சர்மாவும் மயங்க் அகர்வாலும்…









