Aval Vikatan – 28 January 2025 – நமக்குள்ளே… பழையன கழிதல், புதியன புகுதல்… பொங்கல் சொல்லும் எவர்கிரீன் மெசேஜ்!
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியில் உள்ளன நம் வீடுகள். உறவுகள் கூடல், சிறப்பு உணவுகள், நல் நம்பிக்கைகள் கைகூடச் செய்யப்படும் சடங்குகள் என மனம் தித்திக்கக் கிடக்கிறோம். ஓய்வில்லாமல் ஓடும் தினசரிகளுக்கு எல்லாம் விடுப்பு விட்டுவிட்டு இதுபோன்ற சிறப்பு சந்தோஷ தருணங்களை அள்ளித்தருவதால்தானே பண்டிகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மனிதர்கள்?!சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து ஊர் பேருந்து நிலையங்களிலும் திணறத் திணற பொங்கல் சிறப்புப் பேருந்துகள் கிளம்பிக்கொண்டேயிருந்த காட்சிகளின் காரணம் ஒன்றுதான்… கூடடையும் பறவையின் குதூகலம். வேலை, தொழில் உள்ளிட்ட…