Yearly Archives: 2025

இலங்கையை நொறுக்கி உலக சாதனை பார்ட்னர்ஷிப் படைத்த நியூஸி. | நினைவிருக்கா? | otd new zealand created world record partnership crushing Sri Lanka

2015-ம் ஆண்டு இதே ஜனவரி 23-ம் தேதி இலங்கை அணியை நியூஸிலாந்து வென்ற விதம் பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய ஒருநாள் போட்டி டுனெடினில் நடைபெற்றது. இலங்கை அணிக்கு லாஹிரு திரிமானே கேப்டன், அணியில் தில்ஷான், சங்கக்காரா, ஜெயவர்தனே போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். நியூஸிலாந்து அணிக்கு பிரெண்டன் மெக்கல்லம் கேப்டன். இது 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 5-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற திரிமானே முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தார். முதல்…

Fake vs Real: போலி பாதாம்களைக் கண்டறிவது எப்படி? | how to identify fake almonds

பாதாமின் மேற்புறத்தோல் கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கும். போலி பாதமின் மேற்புறத்தோல் வழவழப்பாக இருக்கும் அல்லது மெழுகு பூசப்பட்டிருக்கும்.சுவைநிஜமான பாதாமில் இயற்கையான விதையின் சுவை அதிகாமாக இருக்கும். போலி சுவையற்றதாக அல்லது அதிக இனிப்பாக இருக்கும்.விலைபாதாம் விளைவித்தல், தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செலவுகள் அதிகம் என்பதால் நம்பமுடியாதபடி குறைந்த விலையில் கிடைக்கும் பாதாம்களை சோதித்துப்பார்க்க வேண்டியது அவசியம். அதேவேளையில் அதிக விலைக்கு வாங்குவதனால் மட்டுமே பாதாம் தரமானதாக இருக்காது.பாதாம்களை தண்ணீரில் போடும்போது பாதாமின் மேல ஏதாவது பூசப்பட்டிருந்தால் அது…

“பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' – -ஹெச்.ராஜா

நேதாஜியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். “நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் தமிழர்கள் பெருவாரியாக இருந்தார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரும் பங்காற்றினார். அதனால் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி வருகிறோம்.ஹெச்.ராஜாPeriyar: “ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திலும் பெரியாரைக் கடுமையாக விமர்சிப்போம்” – நாதக மு.களஞ்சியம்காரைக்குடியில் தமிழக முதல்வர் நிலை தடுமாறி பேசி உள்ளார். வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது…

Ranji Trophy : ‘வெறும் 20 நிமிடங்களில் அவுட் ஆன ரோஹித்’ – இந்திய ஸ்டார்களின் ரஞ்சி சோகம்! | Rohit Sharma dismissed in Ranji Trophy

இதனைத் தொடர்ந்து மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆட முன் வந்தார். ஜம்மு காஷ்மீருக்கு எதிராக மும்பை அணி ஆடும் ஆட்டம் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும் ரோஹித்தும் ஓப்பனிங் இறங்கினார்கள். ரோஹித் சர்மா வழக்கமாக வெளிக்காட்டும் அட்டாக்கிங் ஆட்டத்தை இங்கே ஆட விரும்பவில்லை. நின்று நிதானமாக ஆடவே நினைத்தார். ஆனாலும் அவரால் ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. உமர் என்கிற பௌலர் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை அரைகுறையாக…

டிரம்ப்: ரஷ்யாவுக்கு அன்பு கலந்த எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்- யுக்ரேன் எதிர்பார்ப்பு என்ன?

பட மூலாதாரம், EPAகட்டுரை தகவல்யுக்ரேனில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் கருத்து பதிவிட்டிருந்த டிரம்ப், போரை நிறுத்துவதற்கான அழுத்தம் கொடுப்பதால் ரஷ்யாவுக்கும் அதன் அதிபருக்கும் தான் “ஒரு பெரிய உதவி” செய்வதாக தெரிவித்திருந்தார்.2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய முழு வீச்சிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையை…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐசிசி ஆடைக் கட்டுப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கும்: பிசிசிஐ செயலாளார் | BCCI told team India will follow dress code in Champions Trophy cricket series

புதுடெல்லி: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐசிசி-யின் ஆடை கட்டுப்பாட்டை இந்தியா கடைபிடிக்கும் என பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களை கருதி பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய மறுப்பு தெரித்ததால், இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் அணியும் சீறுடையில், தொடரை நடத்தும் இடத்தில் பாகிஸ்தான் பெயரை…

Sanju Samson : “என் மகனைத் தனிமைப்படுத்துகிறார்கள்!" – சஞ்சு சாம்சன் தந்தை வேதனை

சமீப காலமாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் எந்தவொரு தொடராக இருந்தாலும், அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் கூடியிருக்கிறது. அதற்கேற்றவாறு ஐ.பி.எல் உட்பட தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குறைந்தபட்சம் மோசம் என்று சொல்ல முடியாத அளவுக்காவது ஆடியிருக்கிறார். அதற்குப் பலனாக, 2024 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.சஞ்சு சாம்சன்ஆனால், 2022-ல் கார் விபத்துக்குள்ளாகி அதிலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட்டை நேராக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால்,…

Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' – பூரித்த சூர்யகுமார்

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டி20 தொடர் ஈடன் கார்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தியும் பேட்டிங்கில் அபிஷேக் சர்மாவும் கலக்கினர். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், ‘கோச் கவுதம் கம்பீர் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.’ என பூரித்து பேசியிருக்கிறார்.SKYசூர்யகுமார் யாதவ் பேசியதாவது, ‘டாஸை வென்று நாங்கள் போட்டியை தொடங்கிய விதமே சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு…

வங்கதேசம்: மோசமடையும் இந்தியாவுடனான உறவு, வலுவடையும் சீன நட்பு- உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளிவிவகார ஆலோசகர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்8 மணி நேரங்களுக்கு முன்னர்வங்கதேசத்திற்கு வழங்கிய கடனை திரும்ப செலுத்துவற்கான அவகாசத்தை 20 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக உயர்ந்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைன், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடனான சந்திப்பின்போது அவர் கடன் குறித்து பேசினார்.சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக…

“என் மகன் பாதுகாப்பாக இல்லை” – சஞ்சு சாம்சன் தந்தை உருக்கம் | My son is not safe…: Sanju Samson father makes emotional appeal,

கொச்சி: என் மகன் பாதுகாப்பாக இல்லை. கேரளா கிரிக்கெட் சங்கம் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஆறு மாதங்களுக்கு முன்பே சஞ்சுவுக்கு எதிராக அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் கேரளாவை விட்டு…

1 191 192 193 194 195 216