US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்… உண்மை என்ன?
அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். நாடு திரும்பும் இந்தியர்கள் இன்று காலையே பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது.சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து…