தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்: வாஷிங்டன் சுந்தருக்கு விருது! | team india all rounder Washington Sundar receives impact player award
லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருதை வாஷிங்டன் சுந்தருக்கு வழங்க விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.…