Daily Archives: December 15, 2025

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு – தீர்ப்பு குறித்து நடிகை பேசியது என்ன?

பட மூலாதாரம், IMRAN QURESHIகேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய அந்த நடிகை, தனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்று கூறினார். 2017-ஆம் ஆண்டு ஒரு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கேரள செஷன்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 12 அன்று தீர்ப்பு அளித்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து அந்த நடிகை ஞாயிற்றுக்கிழமை அன்று பேசியுள்ளார். நீதிமன்றம் தனது ‘அடிப்படை உரிமைகளைப்’ பாதுகாக்கவில்லை என்று அவர்…

F4 India Championship 2025 போட்டியில் கென்யாவைச் சேர்ந்த ஷேன் சந்தாரியா சாம்பியன்ஷிப்பை வென்றார்.| Kenyan Shane Santharia won the championship in the F4 India Championship 2025.

டிசம்பர் 14 அன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டில் நடைபெற்ற F4 India Championship 2025-ன் இறுதிச்சுற்றில் கென்யாவைச் சேர்ந்த ஷேன் சந்தாரியா சாம்பியன்ஷிப்பை வென்றார். | Photo Album Published:Today at 2 PMUpdated:Today at 2 PM நன்றி

விலங்குகள் தங்கள் குட்டிகளை உண்ணக் காரணம் என்ன?

விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், “தங்கள் குட்டிகளையே உண்ணும் பழக்கம் விலங்குகளிடம் பரவலாகக் காணப்படுகிறது. இது அவற்றின் இனப்பெருக்க உத்திகளில் ஒன்றாகவே உள்ளது” என்று கூறியிருக்கிறார்.அனீஷ் போஸ் கூற்றுப்படி, ”எல்லா விலங்குகளும் இப்படிச் செய்வதில்லை. யானைகள், திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் நீண்ட காலத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே சுமந்து, அதைப் பாதுகாப்பாக வளர்க்கின்றன.…

ஐபிஎல் வீரர்கள் ஏலம்: சிஎஸ்கே அணியில் ஜடேஜா இடத்தை நிரப்பப் போவது யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், பிரதீப் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழ்14 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடருக்கான ஏலம் வரும் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த இடங்களை நிரப்ப வேண்டும், எந்த வீரர்களை வாங்கக்கூடும் என்று பார்ப்போம்.சூப்பர் கிங்ஸிடம் என்ன இருக்கிறது?ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சீசனில்…

“ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை” – சூர்யகுமார் யாதவுக்கு ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் | “Scoring runs is your main job” – Akash Chopra’s advice to Suryakumar Yadav.

தனது யூடியூப் சேனனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “நீங்கள்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஒரு கேப்டனின் வேலை டாஸ் போடுவதும், பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பதும், வியூகம் வகுப்பது மட்டுமல்ல.முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் இறங்கினால், ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை.கடந்த 17 இன்னிங்ஸ்களில் உங்களின் ஆவரேஜ் 14, ஸ்ட்ரைக் ரேட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லாவில்லை, ஒரு அரை சதம்கூட அடிக்கவில்லை. வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்துள்ளீர்கள்.ஆகாஷ் சோப்ராசூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து…

`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' – உதயநிதி ஸ்பீச் ஹைலைட்ஸ்

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் திருவண்ணாமலை இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது.முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டட பலர் கலந்துகொண்டனர்.திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்கூட்டத்தில் பேசிய உதயநிதி, “இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் கிடையாது, நம் எதிரிகள் போடுகின்ற தப்பு கணக்குகளை உடைக்கின்ற கொள்கை கூட்டம்.பொதுவாக இளைஞர்கள் அதிகமாகக் கூடினால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது…

உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரவீந்தர் சிங் 569 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் 29 வயதான ரவீந்தர் சிங், ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் கமல்ஜீத், யோகேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து 1,646 புள்ளிகளை குவித்து…