Daily Archives: November 28, 2025

TVK: “உயிர் மூச்சு உள்ள வரை அவரை முதலமைச்சராக உருவாக்க பணியாற்றுவேன்” – செங்கோட்டையன் | Sengottaiyan Justifies Joining TVK After Exiting AIADMK

அதிமுகவில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். இந்த சூழலில் தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.”மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது”அவர் பேசியதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து புரட்சி தலைவர் மூன்று முறை ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்தார்கள். அவர் என்னை அடையாளம் காட்டினார். அதற்கு பிறகு கட்சி இரு…

கோலியை காரில் அழைத்து சென்ற தோனி; வைரலாகும் வீடியோ | Dhoni gives Kohli a ride in his car; the video goes viral

விராட் கோலியை தோனி காரில் அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்க இருக்கிறது.ஒருநாள்…

நீரிழிவு, பிசிஓடி, குடல் பிரச்சனையை வெண்டைக்காய் ஊறவைத்த நீர் தீர்க்குமா? | Soaked Okra Water: Does It Really Help Diabetes, PCOD and Gut Issues?

இதில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் இருக்கிறது. 2019-ல் விலங்குகளை வைத்து இது குறித்து ஓர் ஆராய்ச்சியும்,  2021-ல் மற்றோர் ஆராய்ச்சியும் நடத்தப்பட்டுள்ளன.அதில் வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெண்டைக்காய் சாப்பிட்டால் இயல்பிலேயே குடலின் செயல்திறன் சீராகும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதாலும் குடல் இயக்கம் சீராகும்.குடல் இயக்கம் சீராகும்2023-ல்  நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்களுக்கு இப்படியெல்லாம் எடுப்பது அலர்ஜியை தீவிரப்படுத்தலாம். இரவு முழுவதும் ஊறவைத்து,…

முகம் பொலிவடைய மாதவிடாய் ரத்தத்தை பூசிக்கொள்ளும் இளைஞர்கள் – பலன் தருமா?

சமூக ஊடகங்களில் ‘மென்ஸ்ட்ரல் மாஸ்கிங்’ என்ற பெயரில் பரவி வரும், மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் பூசுவது அறிவியல் பூர்வமாக எந்தப் பலனையும் அளிக்காது என்றும், நுண்ணுயிரிகள் கலந்த இது சருமத்திற்கு எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரமற்ற செயல்முறை என்றும் தோல் மருத்துவர் எச்சரிக்கிறார். Source link

உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் அளிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் உற்சாகம்

சென்னை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​திருந்​தது. இந்​நிலை​யி​யில் ஹர்​மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்​மஞ்​சேரி​யில் உள்ள சத்​ய​பாமா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இந்நிகழ்ச்​சிக்கு பின்​னர் நிரூபர்​களிடம் ஹர்​மன்​பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்​றியை மொத்த நாடும் கொண்​டாடு​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. நமது நாட்​டில் ஆடவர், மகளிர் கிரிக்​கெட் சமமாக நடத்​தப்​படு​வ​தாகவே உணர்​கிறேன். ஐசிசி கோப்​பையை…

“மொத்த உடலுக்கும் மருந்து; `செலவு ரசம்' வைக்க தெரிஞ்சா ஹெல்தியா இருக்கலாம்'' – ஊட்டச்சத்து நிபுணர்

தட்பவெப்பம் மாறும்போது சளித் தொந்தரவு ஏற்படும். சுவாசக்கோளாறும் வரலாம். ஜீரணக்கோளாறு, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் வாயுத்தொந்தரவுகள் தரும் அவஸ்தைகள் பட்டவர்களுக்கே தெரியும். இதனால், உறக்கமும் பாதிக்கப்படும். இவற்றுக்கெல்லாம் ஒரு சர்வரோக நிவாரண உணவு இருக்கிறது. அதுதான் `செலவு ரசம்’. இதன் செய்முறையைச் சொல்லித்தருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த மரபு உணவு ஆர்வலர் தனலட்சுமி கண்ணுச்சாமி. செலவு ரசத்தின் மருத்துவப்பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.செலவு ரசத்தில் அப்படியென்ன சிறப்பு?தேவையான பொருள்கள்:சுண்டுகார செலவுப் பொருள்கள் – 1 பங்கு (கடுகு,…

மும்பை மாநகராட்சி தேர்தல் : எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஆளும் கூட்டணிகளில் தொடர் பஞ்சாயத்து?

மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடியாகவே சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை…

டெம்பா பவுமா தன் குரலை உயர்த்திக்கூடப் பேசியதில்லை; கேப்டன்சி அணுகுமுறைப் பற்றி ஏபி டிவில்லியர்ஸ் | Temba Bavuma never raised his voice; AB de Villiers on captaincy approach

தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகில் தோல்வியே காணாத கேப்டனாக ஜொலித்து வருகிறார் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணி கேப்டன் டெம்பா பவுமா.1998-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி வென்ற பிறகு, ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிரோபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் ஏங்கிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.அந்த 27 ஆண்டு ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை…

திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை – பாதிப்புகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு

7 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம். படக்குறிப்பு, இரத்தினபுரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு அழிந்ததுகொத்மலை பகுதியில் உள்ள இரத்தினபுரியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு வீடு கிட்டத்தட்ட முழுமையாக அழிந்தது. நல்வாய்ப்பாக இதில்…

உலக ஸ்னூக்கரில் அனுபமா சாம்பியன்

தோகா: ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்​கில் ஹாங்காங்​கின் ஆன் யியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றார்.இதன் மூலம் 23 வயதான சென்​னையை சேர்ந்த அனுப​மா, ஐபிஎஸ்​எஃப் உலக ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற சாதனையை படைத்​துள்​ளார்​. நன்றி