Daily Archives: November 23, 2025

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!’ – பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை.பிரேமலதா…

Smriti Mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் . பலாஷ் முச்சல் – ஸ்மிரிதி மந்தனாஇன்று காலை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.…

பெங்களூருவில் சினிமா பாணியில் ரூ 7 கோடி கொள்ளையடித்த நபர்களை போலீஸார் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Imran Qureshiகட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி இந்திக்காக23 நவம்பர் 2025, 06:41 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர்.கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார்…

முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

கழுத்​தில் ஏற்​பட்ட சுளுக்கு காரண​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் களமிறங்​க​வில்​லை. இதனால் தொடக்க ஆட்​டக்​கார​ராக யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஆகியோர் களம்​பு​குந்​தனர். முதல் ஓவரிலேயே இந்​திய அணிக்கு அதிர்ச்சி காத்​திருந்​தது. ரன் கணக்கை தொடங்​காமலேயே ஜெய்​ஸ்​வால், மார்கோ யான்​சன் பந்​தில் வீழ்ந்​தார். 3-வது ஓவரில் கே.எல்​.​ராகுலும், மார்கோ யான்​சன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்​டன் சுந்​தரும், துருவ் ஜூரெலும் நிதான​மாக விளை​யாடத் தொடங்​கினர். ஆனால் இந்த ஜோடியை ஹார்​மர் பிரித்​தார். துருவ் ஜூரெல் 34…

எந்த கார்போஹைட்ரேட்டுகள் நல்லவை? எவை தவிர்க்க வேண்டியவை? | Which Carbohydrates Are Good and Which Are Bad? A Complete Guide

சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்போஹைட்ரேட் என்றால் என்ன, எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட் என்று தெரிந்துகொண்டால், இந்த தவறான எண்ணம் மறையும்; உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? நல்ல கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து எனப்படுவது, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்.…

Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் கருத்தரிக்கவில்லை. பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம், பலனில்லை. என் தோழி, என் உணவுப்பழக்கத்தை மாற்றும்படி அறிவுறுத்துகிறாள். உணவுப்பழக்கத்துக்கும் கருத்தரித்தலுக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? கருத்தரிக்க விரும்புவோர், எப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளுக்கும் கருத்தரித்தல் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக நினைக்கலாம், ஆனால்,…

Australia vs England :இரண்டாவது நாளிலேயே முடிவை எட்டிய ஆஷஸ் போட்டி|Ashes first test match got ended in day two.

இத்தனை வருட ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் நாளில் 19 விக்கெட்கள் விழுவது இது முதல் முறை. இரண்டாவது நாளில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் அடித்திருந்தார். அதிரடியாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.இரண்டாவது இன்னிங்ஸிற்கு பேட்டிங் வந்த இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு சறுக்கலே தொடர்ந்தது. அடுத்தடுத்து பேட்டர்கள் ஆட்டமிழந்து 164 ரன்களுக்கு…

1.4 லட்சம் ஆண்டுகள் பழமையான குழந்தையின் மண்டை ஓடு காட்டிய மனித வரலாற்றின் ரகசியம்

பட மூலாதாரம், Courtesy of Tel Aviv Universityபடக்குறிப்பு, இஸ்ரேலின் கார்மல் மலையில் குழந்தை ‘ஸ்குல் I’ (Skhūl I) கண்டுபிடிக்கப்பட்ட குகை கட்டுரை தகவல்எழுதியவர், இசபெல் காரோபதவி, பிபிசி முண்டோ22 நவம்பர் 2025, 01:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்நமது இனத்தின் பரிணாம வளர்ச்சியையும், நவீன மனிதர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது.140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குழந்தையின் மண்டை ஓடு, வடமேற்கு இஸ்ரேலில் உள்ள கார்மல் மலையின் குகைகள்…

உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி

பனாஜி: ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பி.ஹரி​கிருஷ்ணா தோல்வி அடைந்​தார். கோவா​வின் பனாஜி​யில் இந்​தத் தொடர் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 5-வது சுற்​றின் டை-பிரேக்​கரில் இந்​திய கிராண்ட்​ மாஸ்​டர் ஹரி ​கிருஷ்ணா​வும், பெரு நாட்​டைச் சேர்ந்த கிராண்ட்​ மாஸ்​டர் ஜோஸ் எடு​வார்டோ மார்​டினஸ் அல்​கான்​டா​ரா​வும் மோதினர். இதில் அல்​கான்​டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்​குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி ​கிருஷ்ணா வெளி​யேறி​னார். நன்றி