குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் வாவுபலி பொருட்காட்சி இந்த முறை 100-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சியில் விவசாயிகள் விளைவித்த பொருட்களின் கண்காட்சி, செடி மற்றும் மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் திறமையை வெளிப்படுத்தும் கலைத்திறன் படைப்புகளின்…








