மாதவிடாயா? மாணவிகளின் ஆடைகளை கழற்றி சரிபார்த்ததாக பள்ளி முதல்வர் கைது
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்மகாராஷ்டிராவின் தானேயில் செயல்பட்டுவரும் ஒரு பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அவர்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சரிபார்த்த பள்ளி முதல்வரும், பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை சுவரில் ரத்தக் கறைகள் காணப்பட்டதால், மாணவிகளுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க அவர்களின் ஆடைகளைக் கழற்றியதாக அவர்கள் இருவரும் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மாதவிடாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட’10 முதல் 15 சிறுமிகளில்’ ஒருவரின் தாய் அளித்த புகாரை அடுத்து, காவல்துறை…