“சமஸ்கிருத வெறி” தமிழை விட 22 மடங்கு அதிகம்; ‘ரூ.2500 கோடி’ ஒதுக்கிய பாஜக அரசு – சு.வெ காட்டம்!
அப்பட்டமான சமஸ்கிருத வெறி!மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒன்றிய அரசு கடந்த ஆண்டுகளாக ஒரு சார்பு நிலை எடுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்றத்திலேயே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என பிரதமர் பேசினார். ஒன்றிய கல்வி அமைச்சர் உலக மொழிகளுக்கெல்லம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றார். இதை எதிர்த்துதன் இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுபினோம்.சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கி.பி 3ம் நூற்றாண்டில்தான் கிடைத்துள்ளது. தமிழின் முதல் கல்வெட்டு…