காதலிக்கும் போது வயிற்றில் பட்டாம்புச்சி பறப்பது ஏன்? – மூளைக்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பு
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கிட்டத்தட்ட 10 கோடி நரம்பு செல்களுக்கும், நமது நலனுக்கு முக்கியமான 95% செரொடோனின் உற்பத்திக்கும் வீடாக இருக்கிறது நமது குடல். உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்துக்கு குடலில் குடியிருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் இன்னும் பல நுண்ணுயிர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கோடிட்டுக் காட்டுகிறது. இது நமது குடலும், மூளையும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை எனக் காட்டுகிறது. சில சமயங்களில் நமது…