கள்ளக்குறிச்சி: SC மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த அரசு; விசிக கண்டனம்| government kallakurichi Pridivimangalam village SC people patta
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களில் 137 பேருக்கு 2001-ம் (அதிமுக ஆட்சி) தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. அப்போது வெறும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதிமன்ற உத்தரவால் பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்தப் பட்டாக்களை அரசு ரத்து செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். அப்போது தெரியவந்ததாவது, 2001-ம் ஆண்டு அரசின் மூலம் இவர்களுக்கு இடம் பிரித்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால்,…